Wednesday, November 6, 2013

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" CHOGM ல் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகம்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிச் சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்திய எதிர்க்கட் சியும் வற்புறுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக் கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக் கையில், இம்மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது அவசியமென்றும், இந்திய அமைச்சர்கள் பலர் இக்கருத்தை வரவேற்றிருந்தமையும், குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.

இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment