Wednesday, November 6, 2013

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களை சீனாவுக்கு அனுப்ப நீதிமன்றம் மீள் உறுதி!

மாத்தளை, குவியல் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பிவை ப்பதற்கு மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி மீண்டும் உறுதிசெய்துள்ளார். இந்த எலும்புகளின் எச்சங்களை சீனா வுக்கு அனுப்புவதற்கு ஆட்சேபங்கள் இருந்த போதிலும் எலும்பு எச்சங்களின் மாதிரிகளை காலம் நிர்ணயிக்கும் காபன் சோதனைக்காகவே சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட விருக்கின்றன.

எலும்புகளின் மாதிரியை காபன் சோதனைக்கு சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவிற்கு பணித்திருந்தது. இதனை பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தார். சீனாவின் சட்ட முறைமை, நீதி நிர்வாகம் என்பன இலங்கை முறைமைகளிலிருந்து வேறுபட்டவை எனவே இந்த மாதிரிகளை ஒரு பொதுநலவாய நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென அவர் வாதிட்டார்.

ஆயினும் இவரது ஆட்சேபத்தை புறத்தொதுக்கிய நீதவான் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பணித்தார்.

No comments:

Post a Comment